00:00
05:56
பொன் அணிஞ்சு வசந்த வாசம் மலநாட்டில்
வர்ண தோரணங்கள் சார்த்தி நின்னு தெளிவானில்
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
♪
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
புது தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
புது தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா
மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்
துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
புது தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா
♪
தீப்பிடித்த தென்றல் ஆனேனே
வேர்வரைக்கும் வெந்து போனேனே
தீப்பிடித்த தென்றல் ஆனேனே
தக திக்தை தகதோம்
வேர்வரைக்கும் வெந்து போனேனே
தக திக்தை தகதோம்
என் தேகம் வியர்வை குளமடி
என் கண்கள் ஒளிக்கும் இடமடி
வாழைப்போல் வழுக்கும் உடலடி
வா என்னும் வயசடி
நெஞ்சை வேக வைத்தானே
நித்தம் சாக வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
புது தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா
♪
ஜாமத்துக்குள் காமன் வந்தானே
ஜாதகத்தில் மச்சன் என்றானே
ஜாமத்துக்குள் காமன் வந்தானே
தக திக்தை தகதோம்
ஜாதகத்தில் மச்சன் என்றானே
தக திக்தை தகதோம்
நீ பார்த்தால் புடவை சரிந்தது
என் பூவில் காம்பு மலர்ந்தது
என் கண்ணின் மணியும் சிவந்தது
என் பெண்மை விடிந்தது
என்னை அற்பமாக்கினான்
கண்ணை கர்ப்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா
மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்
துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
புது தங்க தேரில் ஓணம் வந்தல்லோ