00:00
04:23
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி
தாலாட்டை கேட்காதா ஒரு ஜீவன் நானம்மா
தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா
தாளம் பூவே என் தோள் சாயம்மா
என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இதுதானே
தன்னை தந்து கனவை பெறுவேன் காதல் இதுதானே
♪
உந்தன் பெயரை எந்தன் பேனா எழுதும் போதும்
அழுத்தாமல் அன்பே நான் எழுதுவேன்
உயிரே உந்தன் கண்கள் காணும் கனவில்கூட
நான் வந்து தாலாட்டு பாடுவேன்
என் நிழலை யாரும் தான் மிதித்து போக விடமாட்டாய்
என்னை கில்ல எனக்கே தான் சம்மதங்கள் தரமாட்டாய்
மூக்குத்தி நீ குத்தாதடி என் கண்மணி
அந்த வலி கூட எனை தாக்குமே
உன்னை கொடு என்னை தருவேன் காதல் இதுதானே
கண்ணீர் கொடு புன்னகை தருவேன் காதல் இதுதானே
♪
வெயில் காலம் வந்தால்
கண்ணின் இமைகள் இரண்டை
உனக்காக குடையாக மாற்றுவேன்
காற்றில் தூசும் வந்து
உந்தன் கண்ணில் பட்டால்
பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன்
எந்தன் வீட்டு தோட்டத்தில் நடந்ததந்த பூகம்பம்
பூகம்பத்தின் பின்னாலும் பூமி மெல்ல பூ பூக்கும்
கரை ரெண்டுமே காணாத ஓர் நீரோடை நான்
அணைக்கும் அணைக்கட்டு நானாகிறேன்
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி
ஆண் ஒருவன் தாயான அதிசயத்தை பார்த்தேனே
காதலியை தாலாட்டும் காதலனை கண்டேனே
எந்தன் ஆயுள் ரேகை உன் கையிலே
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இதுதானே
ம் ம் ம்ம்ம் ம்ம்ம்