background cover of music playing
Avaravar Vazhkaiyil - Bharadwaj

Avaravar Vazhkaiyil

Bharadwaj

00:00

05:17

Similar recommendations

Lyric

ஏதோ பிறந்தோம் ஏதோ வளர்ந்தோம்னு

ஒரு சாதாரண வாழ்க்கையா இல்லாம

குடும்பம்னா இப்பிடிதான் இருக்கணும்னு

இந்த ஊரே சொல்ற அளவுக்கு சிறப்பா இருந்துச்சு

அந்த சந்தோஷம் ஊஞ்சல்ல ஆடிக்கிட்ருந்த எங்களுக்கு

காத்தடிச்சாலும் ஏற்கிற மனநிலையை கொடுத்த ஆண்டவன்

புயலடிச்சா எதிர்த்து நிக்கிற பலத்த குடுக்காம விட்டுட்டான்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம்

கனவினில் தினம் தினம் உலா போகும்

அது ஒரு அழகிய நிலா காலம்

கனவினில் தினம் தினம் உலா போகும்

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

காற்றும் கூட எங்களுடன் இரவினில் தூங்க இடம் கேட்கும்

மழை துளி கூட என் தாயின் மடியினில் தவழ தினம் ஏங்கும்

நத்தை கூட்டின் நீர் போதும் எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்

கத்தும் கடலும் கை கட்ட கவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்

தாயின் மடியில் தினம் இறந்து காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்

கனவினை காலையில் மொழி பெயர்த்து சொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்

ஐந்தெழுத்து புது மொழியை அறிய வைத்தாள் என் அன்னை

அண்ணன் தங்கை ஐவருமே நேசம் கொண்டோம் தமிழ் மண்ணை

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அன்னை ஊட்டிய பிடி சோற்றில் ஆயுள் முழுக்க பசி மறந்தோம்

ஒற்றை கண்ணில் அடி பட்டால் பத்து கண்ணிலும் வலி கண்டோம்

பள்ளிக்கூடம் தந்ததில்லை பாசம் என்னும் நூல் ஒன்றை

வேதங்கள் நாங்கும் சொன்னதில்லை எங்கள் கதை போல வேறொன்றை

கண்களும் நீர் துளி கண்டதில்லை அழுதிட அவைகளும் பழகவில்லை

கறுப்பா சிவப்பா தெரியவில்லை கவலைகள் இதுவரை முளைத்ததில்லை

சேகரித்து வைப்பதற்க்கு தேவை என்று எதுவுமில்லை

இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம்

கனவினில் தினம் தினம் உலா போகும்

அது ஒரு அழகிய நிலா காலம்

கனவினில் தினம் தினம் உலா போகும்

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

- It's already the end -