00:00
05:40
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம் நம்புமா
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
♪
உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும்
நடமாடுதே பாரம்மா
என் வாழ்வே பாரமா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீறுதே
தாங்குமா என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால்
என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால்
என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு தொடர்கதையே
இங்கு விடுகதையா
அந்த விடையின் எழுத்து எந்தன்
விதி வந்து மறைத்ததா
பொங்குதே கண்ணீரும் பொங்குதே ஓ ஓ
கண்களில் உன் பிம்பம் தங்குதே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
♪
வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
ஒரு ஜென்மம் வாங்கி வந்து
இரு ஜென்மம் வாழுகிறேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாயமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை
இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன
நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடிவது
ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம் நம்புமா