00:00
04:13
நம்ம கடைவீதி கலகலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா (ஆமாஞ்சொல்லு)
நம்ம bus stand'u பளபளபளக்கும்
ஒரு பச்சை கிளி அது பறந்து வந்தா (அப்படி சொல்லு)
ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வெச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடைவீதி கலகலக்கும்
என் அக்கா மக (அவ நடந்து வந்தா)
♪
ஒரு சிங்கார பூங்கொடிக்கு ஒரு சித்தாட தான் எடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே (அடி-ஐய்யடி-ஐய்யா)
சிறு வெள்ளி கொலுசெதுக்கு (அடி-ஐய்யடி-ஐய்யா)
கண்ணால சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணனுமின்னா வெக்கப்படுவா
வேறேதும் சங்கடம் இல்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா
வெட்ட வெளியில் (ஐய்யய்யோ)
ஓரு மெத்தை விரிச்சேன் (ஐய்ய-யய்யோ)
மொட்டு மலர தொட்டு பரிச்சேன் மெல்ல சிரிச்சா
கக-கக-கடைவீதி கலகலக்கும்
என் அக்கா மக (அவ நடந்து வந்தா)
நம்ம bus stand'u பளபளபளக்கும்
ஒரு பச்சை கிளி (அது பறந்து வந்தா)
♪
அடி முக்காலும் காலும் ஒண்ணு
இனி உன்னோட நானும் ஒண்ணு
அடி என்னோட வாடி பொண்ணு (அடி-ஐய்யடி-ஐய்யா)
சிறு செம்மீன போல கண்ணு (அடி-ஐய்யடி-ஐய்யா)
ஓய்-ஒண்ணாக கும்மியடிப்போம்
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனச கொள்ளை அடிப்பேன்
கல்யாண பந்தல கட்டி பத்திரிக்கையும் வெச்சிக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்க கொடமே (ஐய்யய்யோ)
புது நந்தவனமே (ஐய்ய-யய்யோ)
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்ப சொகமே
அடடட- கடைவீதி கலகலக்கும்
என் அக்கா மக
(ஐய்-யப்பா-எண்ணன்ணே இந்த அடி அடிச்சிட்டீங்க)
யாரோட அக்கா மகடா டாய்
அண்ணணோட அக்கா மக (ஹான்)
அவ நடந்து வந்தா
நம்ம bus stand'u பளபளபளக்கும்
அண்ணணோட பச்சை கிளி (ஹே-ஹே-ஹேய்)
அது பறந்து வந்தா
ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வெச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடைவீதி கலகலக்கும்
என் அக்கா மகய் (அவ நடந்து வந்தா)
நம்ம bus stand'u பளபளபளக்கும்
ஒரு பச்சை கிளி (அது பறந்து வந்தா)