background cover of music playing
Nenjorathil - Female Vocals - Supriya Joshi

Nenjorathil - Female Vocals

Supriya Joshi

00:00

04:13

Similar recommendations

Lyric

நெஞ்சோரத்தில்

என் நெஞ்சோரத்தில்

என்னை அறியாமல்

நுழைந்துவிட்டாய் ஓ-ஓ

கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்

எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய் ஓ-ஓ

எனக்கென்னானது

மனம் தடுமாறுது

விழி உனைத் தேடித்தான் ஓடுது

தேடுது ஆ-ஆ-ஆ

நெஞ்சோரத்தில்

என் நெஞ்சோரத்தில்

என்னை அறியாமல்

நுழைந்துவிட்டாய் ஓ-ஓ

ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

என் காலடி மண்ணில் பதிந்தாலும்

நான் நூறடி உயரம் மிதக்கிறேன்

நீ ஓரடி தூரம் பிாிந்தாலும்

என் உயிாில் வலியை உணா்கிறேன்

புது கொள்ளைக்காரன் நீயோ?

என் நெஞ்சைக் காணவில்லை

நான் உன்னைக்கண்ட பின்னால்

என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து இருவரும் இருக்க

ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க

ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை

எனை மயக்கிவிட்டாயே!

நெஞ்சோரத்தில்

என் நெஞ்சோரத்தில்

என்னை அறியாமல்

நுழைந்துவிட்டாய் ஓ-ஓ

உன் கைகள் தொட்ட இடம் பாா்த்து

நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்

சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்

உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்

உன் கண்ணை உற்றுப் பாா்த்தால்

லட்சம் வாா்த்தை சொல்லும்

அதில் ஏதோ ஒன்று என்னை

எங்கோ தூக்கிச் செல்லும்

ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க

விரல் நுனி உரசி வீதியைக் கடக்க

ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை

எனை மயக்கிவிட்டாயே!

நெஞ்சோரத்தில்

என் நெஞ்சோரத்தில்

என்னை அறியாமல்

நுழைந்துவிட்டாய் ஓ-ஓ

எனக்கென்னானது

மனம் தடுமாறுது

விழி உனைத் தேடித்தான் ஓடுது

தேடுது ஆ-ஆ-ஆ

நெஞ்சோரத்தில்

- It's already the end -