background cover of music playing
Malligai Malligai (" From Arasu") - Sujatha

Malligai Malligai (" From Arasu")

Sujatha

00:00

05:12

Song Introduction

"மல்லிகை மல்லிகை" என்ற பாடலை "ஆரசு" திரைப்படத்தில் இருந்து அறிமுகப்படுத்தியுள்ளார் சுஜாதா. இந்தப் பாடல் தமிழ்க் கோலாக் ரசிகர்களிடையே வெளியான பொழுது பெரும் வரவேற்பைப் பெற்றது. இனிமையான மொழி மற்றும் மனதிற்குள் நிற்கும் வார்த்தைகள் மூலம், இது ரசிகர்களின் மனதில் ஒரு அழகான இடத்தை வைத்து உள்ளது. இசை விமர்சகர்களாலும் நேர்மறையான கருத்துக்களை பெற்ற இந்த பாடல், திரைப்படத்தின் வெற்றிக்குச் முக்கிய பங்காற்றியது.

Similar recommendations

Lyric

மல்லிகை மல்லிகை பந்தலே

அடி மணக்கும் மல்லிகை பந்தலே

என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே

கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல

எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள

இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள

எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே

பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே

உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே

கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே

மல்லிகை மல்லிகை பந்தலே

அடி மணக்கும் மல்லிகை பந்தலே

என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே

கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே

தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே

பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி

உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி

பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே

உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே

புரியாத கவிதை போல வாழ்ந்து வந்தேனே

அவை யாவும் உந்தன் கண்ணில் அர்த்தம் கண்டேனே

இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே

எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே

என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே

கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே

பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே

கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே

நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே

சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே

அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே

மழை தூறும் சாலை ஓரம் உன்னை கண்டேனே

குடை குள்ளே ஓடி வந்தாய் குடை சாய்ந்தேனே

உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே

உந்தன் உதட்டை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே

உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே

கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே

மல்லிகை மல்லிகை பந்தலே

அடி மணக்கும் மல்லிகை பந்தலே

என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே

கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல

எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள

இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள

எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

- It's already the end -