00:00
04:26
தற்போது இந்த பாடலுக்கு தொடர்புடைய தகவல்கள் எதுவும் இல்லை.
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா
தீவானா ஹோ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீ தானா
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன்காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா ஹோ தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா
♪
வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
கீச் கீச்சென்று கூச்சல் போடுதே
நெஞ்சுக்கூட்டில் கூடு கட்ட மல்லுக்கட்டுதே
சும்மா அது கத்திச் செல்லுமோ
இல்லை எம்மா நெஞ்சை கொத்திச் செல்லுமோ
அன்னை தந்தையை ஆசை தோழியை
காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
தூக்கம் விற்று தான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
அய்யோ இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமோ
मिले एक अजनबी से कोई आगे न पीछे
तुम ही कहो क्या बात है
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
♪
காதல் எண்ணமே அய்யோ அசிங்கமே
என்று கண்கள் காது மூக்கு பொத்திக் கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டன
காதல் உள்ளே வந்து விட்டது
எந்தன் நாணம் வெளியே சென்று விட்டது
தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி நான்
காதில் ஒற்றை சேதி சொல்ல நெஞ்சம் முட்டுதே
ஆனால் நாவிலே ஆனா ஆவன்னா
ரெண்டெழுத்தை தவிற வேற வார்த்தை இல்லையே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்
என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்
मिले एक अजनबी से कोई आगे न पीछे
तुम ही कहो क्या बात है
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா ஹோ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீ தானா
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன்காதல் சொல்லும் மாயக் கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா