00:00
03:25
நிலாக் காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெயில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆ வானும் மன்னும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
நிலாக் காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
♪
அதோ போகின்றது ஆசை மேகம்
மழையைக் கேட்டுக்கொள்ளவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்
இசையை கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்கையே சீதனம்
உங்கள் தேவையை கேளுங்கள்
நிலாக் காய்கிறது
நிறம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்