00:00
05:05
ஓஹோ ஓஓ
♪
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
நீதானே நீதானே என் தாய்போல
தூங்காத சேய்போல
துரத்தாத பேய் போல
காதல் செய்தாய்
காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
♪
மஞ்சரியே மாரதியே நீயும் வா வா வெளியே
உன் இடையை நான் அணைத்தே பரப்பேன்
மேலே வா கிளியே
ஹா ஆஆ வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும் உன் வழியே
என்னை காணாமலும் முகம் கோணாமலும்
தினம் நின்றாயடி எனை வென்றாயடி
நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய
♪
பகல் எல்லாம் பார்க்காமல்
ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்
நீ வந்த பின்தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற
வேகம் என்னையும் மீறும்
விரல் கோர்த்தாலென்ன
நிரல் கேட்டாலென்ன
பழி தீர்த்தாலென்ன
பதம் பார்த்தாலென்ன
நான் காவலன்தானே இருந்தும்
கொள்ளையிட வந்தேனே
ஹா ஆஆ ஹ்ம்ம் ம்ம்ம்
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன்
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்