00:00
04:51
மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
மேகமோ அவள்
மாய பூ திரள்
வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில்
என் கண்களை இழந்தேன்
என் நிழலும் என்னையே உதறும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
உன் ஞாபகம் தீயிட
விறகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில்
அரியாசனம் செய்கிறேன்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும் கரையும் வளரும்
உன் நினைவும் அது போல் மனதை குடையும்