background cover of music playing
Avalo Avalo - From "Vasantha Mullai" - Rajesh Murugesan

Avalo Avalo - From "Vasantha Mullai"

Rajesh Murugesan

00:00

03:51

Similar recommendations

Lyric

சொல்லாத வார்த்தைகள் சுவையானவை

அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை

சொல்லுக்குள் உன்னை

சுருக்கி விட மனம் இல்லை

அளவில்லா உணர்வுகளை

அரை பக்கத்தில் அடைத்து வைக்கும்

ஆசையும் இருந்ததில்லை

உன் நெற்றி பரப்பில் என் விரல் தொடும் போதும்

உன் கழுத்தில் பரவி என் மூச்சு சுடும் போதும்

உன் உயிரை எழுப்ப நான் முத்தம் இடும் போதும்

புரிந்துகொள் என் பேரன்பை

சொல்லாத வாரத்தைகள் சுவையானவை

அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை

அவளோ அவளோ

நிலவின் போதை துகளோ

அவளோ அவளோ

கார் குழல் விரியும் மயிலோ

திசை அறியாத மேகம்

தலையினில் விழுதோ

கடவுள் கை கொண்டு எழுத முடியாத

கவிஞனின் கற்பனையோ...

கோதை மடியில் தோகை கனவு

கோதும் விரலாக என் வாழ்வே

தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா

தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானா ஆ...

தூரிகை காரிகை

நீ செய்த வண்ணங்கள் நான்

உன்னை போலே என் பிம்பம்

உள்ளே வாழ்வது நானா, நீதானா

ஆஅ... ஆஅ... ஆஅ...

- It's already the end -