00:00
03:56
வான் மேகம் பூ பூவாய் தூவும்
தேகம் என்னவாகும்?
இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது
எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக்கம்பி குளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழ்க வென்றது
காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளும் இல்லை சேர்த்தெடுக்க
நூலும் இல்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூ பூவாய் தூவும்
தேகம் என்னவாகும்?
இன்பமாக நோகும்
♪
வானிலே வானிலே
நீரின் தோரணங்களோ ஹோ
என் மனம் பொங்குதே
என்ன காரணங்களோ
அவன் விழி அசைத்ததில்
இவள் மனம் அசைந்ததோ
தளிர்க்கரம் பிடிக்கையில்
மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே
சங்கீத மேடை ஆனதோ
பாடல் பாடுதோ
தூறல் போடுதோ
தோகை ஆடுதோ
பூமி எங்கும் கவியரங்கம்
சாரல் பாடும் ஜலதரங்கம்
வான் மேகம் பூ பூவாய் தூவும்
தேகம் என்னவாகும்?
இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது
எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக்கம்பி குளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழ்க வென்றது
காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளும் இல்லை சேர்த்தெடுக்க
நூலும் இல்லை கோர்த்தெடுக்க
வான் மேகம், பூ பூவாய் தூவும்
தேகம் என்னவாகும்?
இன்பமாக நோகும்