00:00
04:54
இறைவா
என் இறைவா
என்னைத்தேடி என் மனம்
போர்க்களம் ஆனதே
இறைவா
என் இறைவா
எந்தன் இரு கால்களை
பாதையே மேயுதே
என்னை படைத்தவன் நீதானய்யா
உயிர் வளர்த்ததும் நீதானய்யா
என்னை சபித்தவன் நீதானய்யா
உயிர் எரித்தால் தாங்காதய்யா
என்னை சபித்தவன் நீதானய்யா
உயிர் எரித்தால் தாங்காதய்யா
நான் வாழவா?
நான் வீழவா?
என் செய்வது?
நீ சொல்லு வா
என்னை சபித்தவன் நீதானய்யா
உயிர் எரித்தால் தாங்காதய்யா
நான் வாழவா?
நான் வீழவா?
என் செய்வது?
நீ சொல்லு வா...
♪
இறைவா வா...
♪
உயிரே
என் உறவே
உன்னை விட்டுப் போவதும் சாவதும் ஒன்றுதான்
இரவே
என் பகலே
இனி வரும் நாளெல்லாம் உன் விழி முன்புதான்
பிரிவெனும் துயர் தீண்டாமலே
துணை இருந்திடும் என் காதலே
இலக்கணம் எதும் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா?
நீ கூடத்தான்
ஓடோடி வா
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா?
நீ கூடத்தான்
ஓடோடி வா
♪
காடு மலை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்
தூயபெருங்காதலின்
ஆழம் வரை போகலாம்
நான் விரும்பி அடையும்
பொன் சிறையே சிறையே
நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே
நிரந்தரம் என ஏதும் இல்லை
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை
இருந்திடும் வரை போராடலாம்
எரிமலையிலும் நீராடலாம்
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா?
நீ கூடத்தான் ஓடோடி வா
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா?
நீ கூடத்தான்
ஓடோடி வா
♪
உயிர் விடும் வரை
உயிர் விடும் வரை
உன்னை விட்டால் உடல்
உன்னை விட்டால் உடல்
நான் என்பது
நான் மட்டுமா?
நீ கூடத்தான்
ஓடோடி வா